சவுதியில் உம்ரா பயணிகள் சென்ற பேருந்து விபத்து! 13 பேர் மரணம்!

அரேபியாவில் உம்ரா யாத்திரிகர்கள் பயனம் செய்த பஸ் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளதுடன் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உலகின் சில நாடுகளை சேர்ந்த 49 உம்ரா யாத்திரிகர்கள் விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயனம் செய்துள்ள அதேவேளை இவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்துள்ளனர்.

முன் டயர் வெடித்ததால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர்கள் எகிப்தியர்கள் என சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Close