DR.Pirai….அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் வேண்டாமே :பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் !!


அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் வேண்டாமே :


முதலில் காரம் இல்லாத உணவு வகைகளைக் கொடுத்து, பிறகே கொஞ்சம் கொஞ்சமாக காரம் மற்றும் மசாலா சேர்ந்த பொருட்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவேண்டும்.

உணவில் மிக அதிகமான சர்க்கரையையும், உப்பையும் சேர்க்காதீர்கள், அதிகப்படியான உப்பு உடம்பில் நீர் இல்லாமல் செய்துவிடும், அதிகப் படியான இனிப்பு சொத்தைப் பல்லை உண்டாக்கும் பிற்காலத்தில் இதனால் பலவிதமான பிரச்சினைகள் உருவாகும். முக்கியமாக 1 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். குழந்தையின் சுவை உறுப்பு நன்றாக வேலை செய்யக்கூடியது. ஆகவே, அதற்கு அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் தேவையில்லை.

குழந்தைகளிடம் உணவைத் திணிக்காதீர்கள் :


சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவுகளையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேகமாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்படுவது. 

குழந்தை திட உணவை புறக் கணித்தால் அதனைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். திட உணவின் அமைப்பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறு படுவதாலும், விழுங்கும் முறை வழக்கமான ஊறிஞ்சிக் குடிக்கும் முறையிலிருந்து வேறுபடுவதாலும் குழந்தை புறக்கணிக்கக் கூடும்.

குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள். அதனைக் கட்டாயபடுத்தாதீர்கள். மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள் வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்கூழ் போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளை புறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் அதன் கெட்டிதன்மையும் பழக்கப்படுத்திக் கொள்ளட்டும்.

குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள், அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள். அவர் சிறிது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கும் ஏற்ப கொடுங்கள். 

குழந்தையைப் பெருக்க வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள் உதாரணமாக, அதிகப்படியான வெண்ணெய் அல்லது நெய், கிரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த திண்பண்ட வகை இவைகள் குழந்தையைப் பெருக்க வைக்கும், எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக முடிவில் தடித்த குழந்தையாக ஆகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனாவான். 
புளிக்காத ஃபிரிட்ஜில் வைக்காத தயில் சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீயா இருப்பதால் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.

தினம் தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாவது குழந்தைகளுக்கு காய்கறி உணவுகளையும், பழங்களையும் கொடுங்கள். குழந்தைகளுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள்.

சில குழந்தைகள் கையில் எதை கிடைத்தாலும் வாயில் போட்டுக் கொள்ளும். இது போன்ற குழந்தைகளுக்கு கையில் பிடித்துக் கொள்ளும் வகையிலான ரொட்டி, அப்பம் அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரட் போன்றவற்றை கொடுக்கலாம்.

அதிகமான கடின உணவைக் கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக்கியமாக வளர உதவி புரிகின்றது. குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது சௌகாரியமாப அமையும். 

இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங் கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.

குழந்தைகளுக்கு நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று அதிகமாக கொடுக்கலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், பி புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு இரும்புச் சத்து, புரசச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத் தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தைகளுக்குத் தேவையான சத்துகளும் மாறும் அதற்கேற்ப கவனித்து குழந்தைகளுக்கு உணவளியுங்கள்.


 

Advertisement

Close