புதுப்பட்டினம் ஊராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் SDPI கட்சி வேட்பாளர் !

வரும் செப்டம்பர் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது .இதனை அடுத்து புதுபட்டினத்தில் காலியாக உள்ள ஊராட்சி தலைவர் பதவிக்கு SDPI கட்சி போட்டியிடுகிறது.இதில் SDPI கட்சி வேட்பாளராக சம்சுன் மகரிபா அவர்கள்  போட்டியிடுகிறார்கள். இதனை அடுத்து இன்று பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.இதில் தஞ்சை SDPI தெற்கு மாவட்டத்  தலைவர் Z. முகம்மது இலியாஸ், புதுப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் ,புதுப்பட்டினம்  ஊராட்சி துணை தலைவர் SDPI கட்சியை சேர்ந்த அஹ்மத் ஆசாத் இவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.     

Advertisement

Close