அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் நடைபெற்ற தமாம் நிகழ்ச்சி!

imageதமிழகத்தில் இன்றுடன் ரமலான் மாதத்தில் 28 நோன்புகளை கடந்து 29வது நோன்பை நோற்க உள்ளனர். வருடா வருடம் ரமலான் மாதத்தில் அதிரையின் பெரும்பாலான பள்ளிகளில் 27,28,29 ஆகிய பிறைகளில் தராவீஹ் தொழுகையில் குர் ஆனை நிறைவு செய்து தமாம் விடுவது வழக்கம். அந்த வகையில் பெரிய ஜும்மா பள்ளியில் 29 பிறையில் தமாம் நிகழ்ச்சி நடத்தப்படும். இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தொழுகைக்கு பயானும் அதனை தொடர்ந்து வருகை தந்த மக்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.

Close