தமிழகத்தில் வெளியான இருவேறு பெருநாள் அறிவிப்புகளால் பொதுமக்கள் குழப்பம்!

உலகம் முழுவதும் பல நாடுகளில் இன்றுடன் ரமலான் 30 நோன்புகளையும் நிறைவேற்றியதோடு நாளை நோன்பு பெருநாளை கொண்டாட உள்ளனர். இன்னிலையில் தமிழகத்தில் 29 நோன்புகளை முஸ்லிம்கள் நோற்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக எங்கும் பிறை தென்படவில்லை என்று கூறி தலைமை காஜி நாளை மறுநாள் நோன்பு பெருநாள் என்று அறிவித்தார். இது பரவலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது ஒரு புறமிருக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குமரி மாவட்டத்தில் பிறை தென்பட்டுள்ளதால் நாளை நோன்பு பெருநாள் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் வெளியான இரு வேறு அறிவிப்புகளால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Close