அதிரை TNTJ கிளை 2 இன் சார்பாக நடத்தப்பட்ட நோன்பு பெருநாள் திடல் தொழுகை (படங்கள் இணைப்பு)

b2முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது.

அந்தவகையில் நேற்றைய தினம் கன்னியாகுமரியில் பிறை தென்பட்டதை அடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று பெருநாள் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அதிரை TNTJ கிளை 2 இன் சார்பாக பெருநாள் திடல் தொழுகை AL பள்ளி அருகில் நடைபெற்றது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.image image image image

Close