நாகூரில் பதற்றம்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மோதல்!

நேற்றைய தினம் இந்து மத சகோதரர்கள்  நம்பிக்கைபடி இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி நடந்தது. 

அந்த கொண்டாட்டம் நேற்றோடு முடிவுற்று நிலையில் இன்று (30.8.2014) நாகூர் மீனவ சமுதாயத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களுமாக மதகுருக்கள் உட்பட நாகூர் தர்காவிற்கு சொந்தமான யானை ஒன்று அவர்களை வழிநடத்தி சென்றனர்.
மேல தாலத்தோடு இதுவரை எந்த வருடமும் இல்லாமல் அடர்ந்த முஸ்லீம் சமுதாயம் வாழும் மீயான் தெரு எனும் தெருவில் உள்ள ஹிளுறு பள்ளி எனும் பள்ளிவாசல் வழியாக சரியாக மகரிப் தொழுகைக்கு பாங்கு சொல்லிக்கொண்டிருக்கும் சமயம் கடந்து செல்ல முயன்றனர்.

அப்போது அங்கிருந்த ஒரு சில முஸ்லீம்  சமுதாயத்து இளைஞர்கள் அவர்களை தடுத்து  நிறுத்தி உங்களுக்கு இவ்வழியே செல்ல அனுமதி கொடுத்தது யார்? என்று வினவ அதற்கு சிலர் ஏதோ கூற….

இருவருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த இரு சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து வழக்கத்துக்கு மாறான விபரீதத்தை உருவாக்கிய இந்த ஊர்வலம் குறித்தும், இதனை பற்றி நாகூர் காவல்துறை மற்றும் உளவுதுறையின் கவனமின்மையை சுட்டிக்காட்டும் வண்ணமும் காவல் துறையிடமே முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புகார் மனு ஒன்றையும் கொடுத்து இருக்கிறார்கள்.

காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்ற இந்த இடைப்பட்ட நேரத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலர் வன்முறையில் ஈடுபடவேண்டும் என்ற சிந்தனையில் பள்ளி வாசலுக்கு அருகே வந்து, யாருடா அனுமதி இல்லை என்று தடுத்தது என்று கேட்க…. இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, இரத்த காயங்கள் ஏற்பட்ட இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் நாகூர் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

தகவல். நாகூர் தீன்.

Advertisement

Close