அரப் நியூஸிடம் இந்திய ஊடகங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

13626599_1082541898447794_9089539100804340883_nஜித்தாவில் வெடித்த மனித வெடிகுண்டு ஒரு பாகிஸ்தானி என்று அடையாளம் காணப்பட்டது மட்டுமின்றி, இத்தீவிரவாதியின் கார் தான் கதீஃப் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் கடந்த 2 நாட்களில் பரபரப்பு தலைப்புச்செய்தி.

இந்நிலையில்… சவூதி மக்கள் தங்கள் நாட்டிலுள்ள பாகிஸ்தானிகள் மீது கோபம் கொண்டுவிடக்கூடாது என்பதற்காக……..

கடந்த 2009 ஆண்டு, ஜித்தா வெள்ளத்தில் சிக்கிய 14 சவூதிகளை நீச்சலிட்டு காப்பாற்றிவிட்டு, 15 வது சவூதியை காப்பாற்ற முயற்சிக்கையில் வீரமரணம் அடைந்த ஒரு பாகிஸ்தானியை தம் மக்களுக்கு நினைவூட்டி, அவரின் செயலை போற்றி, அவர் பெயரை ஒரு ஜித்தா சாலைக்கு சவூதி அரேபிய அரசு சூட்டியதையும் நினைவூட்டி,

//தனிப்பட்ட ஒரு நபரின் செயல்கள், நிச்சயமாக ஒரு முழு சமூக மக்களை துவேஷித்து இழிவுபடுத்தலாகாது//

….என்று சவூதியின் முன்னணி ஊடகமான ‪‎அரப்நியூஸ்‬ செய்தி வெளியிடுகிறது.

இதுதான் உயர்வான ஊடக தர்மம்..!

சவுதியில் துவேஷம் விதைக்க தினமலர் மாதிரியான ஊடக வியாதி அசிங்கங்கள் இல்லாததால்…

பாகிஸ்தானிகள் எவ்வித குற்றவுணர்ச்சியும் இன்றி சகஜமாக சக சவூதிகளுடன் கட்டித்தழுவி ஈத் பெருநாளை கொண்டாட, அவர்களுடன் எவ்வித வெறுப்புணர்வும் இன்றி சவூதிகளும் அளவளாவி மகிழ்ந்து அவரவர் வேலையை அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

Close