இறந்த முத்துசாமியின் உடலை இந்து முறைபடி அடக்கம் செய்த அதிரை இஸ்லாமிய இளைஞர்கள்! (படங்கள் இணைப்பு)

13590339_287122018304517_7940988063044539795_nஅதிரை வண்டிபேட்டையில் வசித்து வருபவர் முத்துசாமி. மதுக்கூரைப்சேர்ந்த இவர் கடந்த 15 ஆண்டுகளாக அதிரையில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை இன்று காலை வீடு திரும்பியுள்ளார். இந்சிலையில் மதியம் அவர் உயிழந்துவிட்டார். உறவினர்கள் ஏதும் இல்லாமல் இறந்த தந்தையின் உடலை வைத்துக்கொண்டு திக்கற்ற நிலையில் இருந்த அந்த பெண்மனிக்கு அதிரை இளைஞர்கள் உதவி செய்யும் பொருட்டு இறந்த முத்துசாமியின் உடலை இந்து முறைபடி அடக்கம் செய்து அந்த சகோதரிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியினையும் செய்துள்ளனர்.

நோன்பு பெருநாளன்று ஊர் சுத்தும் அதிரை இளைஞர்கள் மத்தியிலும் இந்த மகத்தான் செயலை செய்த இந்த இளைஞர்களின் செயல் பாராட்டுக்குறியது.

Close