தீவிரவாதிகளை உருவாக்குகிறதா ஜாகிர் நாயக் போதனை..? இந்தியாவை ஆய்வு செய்ய சொல்லும் வங்கதேசம்

zakir_naikஜாகீர் நாயக்கின் போதனை மட்டும் தீவிவாதத்தை ஊக்குவித்திருக்குமேயானால் என்னை போன்ற கோடிக்கணக்கான இளைனர்களை தவறான வழிக்கு செலுத்தியருக்கும் .. ஆனால் எதார்ததத்தில் ஜாகிர் நாயக்கின் இஸ்லாம் உள்ளிட்ட சமயங்களை பற்றிய கலந்துரையாடல்கள் , இஸ்லாத்தின் அடிப்படைகள் , இஸ்லாம் கூறும் நீதி , அநீதமான கொலைகளுக்கு எதிரான நாயக்கின் உரைகள் இவைகள் பல கோடி இளைஞர்களை சமாதத்தின் பக்கம் அழைத்துக் கொண்டே உள்ளது என்பதே எதார்த்தமான உண்மை .. மேலும் இஸ்லாம் மற்ற மதங்களை பற்றிய வேதங்களின் உண்மையான நிலையை அறிய உதவியிருக்கிறது என்றால் மிகையில்லை.. ஆனால் இன்று எந்த சமாதத்தானத்தை வலியுறுத்தி ஜாகிர் நாயக் தொடர்ந்து பிரட்சாரம் செய்து வருகிறாரோ அந்த நபரை தான் தீவிரவாதத்துடன் தொடர்பு பாடுத்துகின்றன கேடுகெட்ட ஊடகங்கள்..

பங்களாதேஸ் தாக்குதல் குறித்து ஜாகிர் நாயக் கருத்தை கூறும் பொழுது” பங்களாதேஷில் 90% மக்களுக்கு என்னை தெரியும்.. அப்படி இருக்கும் பொழுது அங்கு தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு ஜாகிர் நாயக் தெரியும் என்று கூறுவது வேடிக்கையானது என்று கூறியுள்ளார்”
இது தான் எதார்த்தமான உண்மையையும் கூட உலக அளவில் பிரபலமான ஒரு நபரை எவனோ ஒருவன் செய்த தவறுக்காக குற்றவாளியாக்குவது எப்படி நியாயமாகும்.. அபப்டியானால் உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் ஜாகிர் நாயக்கின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு நேரான வழியில் பயணிக்கின்றனர்.. ஏன் இந்த உண்மைகளை எல்லாம் மக்கள் மன்றத்தில் ஊடகங்கள் கூற மறுக்கின்றனர் ..
கேடுகெட்ட ஊடகங்களுக்கு தெரியாத ஒரு உண்மை அல்லது மறைத்த ஒரு உண்மை.. ஜாகீர் நாயக் நிகழ்ச்சிக்கு வரும் மக்களில் 25% மேற்பட்ட மக்கள் முஸ்லிம் அல்லாத மக்கள் தான்.. மேலும் ஜாகீர் நாயக்கிடம் கேள்விகளை கேக்கும் மக்களில் 99% மக்கள் முஸ்லிம் அல்லாத மக்கள் தான்.. ஒருவேளை கேடுகெட்ட ஊடகங்கள் கூவுவதை போல ஜாகீர் நாயக் நிகழ்ச்சிகளில் தீவிரவாதத்தை ஊக்குவித்திருப்பாராயிரானால் எப்படி மாற்றுமத சகோதரர்கள் அதிக அளவில் இந்நிகழ்ச்சியில் பங்கெடுப்பர்கள்.. இஸ்லாத்தை குறித்த கேள்விகளை கேட்பார்கள்.. இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக எப்படி ஏற்பார்கள்..

எது எப்படியோ உலகின் ஜியோனிஸ ஊடகங்களும் சரி இந்தியாவின் பார்ப்பனீய ஊடகங்களும் சரி இஸ்லாத்தை பொய்களின் மூலமும் இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை மக்கள் மன்றத்தில் பரப்பும் அறிவு ஜீவுகளை எப்படி அழிக்கலாம் என்று தான் சிந்திக்கின்றனர் .. ஆனால் இவர்கள் என்னதான் சூழ்ச்சி செய்தாலும் இந்த மார்க்கம் மேலோங்கி கொண்டே இருக்கிறது என்பதே எதார்த்தமான உண்மை..

Close