அதிரை TIYA வின் நன்றி அறிவிப்பு!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
மன்னிக்கவும் மொத்த தொகையில் ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளோம் 
அமீரக வாழ் மேலத்தெரு முஹல்லா வாசிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அமீரகத்தில் செயல்பட்டு வரும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) வின் சார்பாக எல்லா வருடங்களும் நோன்பு காலங்களில் நமது முஹல்லாவாசிகளிடமிருந்து பித்ரா நிதி வசூல் செய்து தாயகத்தில் செயல்படும் நமது (TIYA) வின் நிர்வாகிகளுக்கு அனுப்பிவைப்பது வழக்கம் அது போன்று இந்த வருடம்  வசூல் செய்த 4810-DHS – ரூ-90,239.00 தாயக (TIYA)- நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சென்ற வருடம் போல் இந்த வருடமும் குவைத்தில் பணி புரியும் நமது முஹல்லா சகோதரர் பிச்சை குட்டி பாவா பகுருதீன் அவர்கள் பித்ரா நிதியாக 150 கிலோ அரிசியும் ரூ-5000/- ரொக்க தொகையும் வழங்கியுள்ளார். இவை இரண்டும் சேர்த்து மொத்த தொகை ரூ-95,239/- அனுப்பி வைக்கப்பட்டது.
மேலத்தெருவில் வாழ்கிற தேவையுடைய ஏழை-எளிய மக்களுக்கு பெருநாள் தர்ம மாக கீழ் காணும் பொருல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே (TIYA) சார்பாக் வழங்கப்பட்ட பெருநாள் தர்மத்தின் மூலம் 183 குடும்பங்கள்பயனடைந்துள்ளனர்.
வழங்கப்பட பொருல்களின் விபரம்:
1. அரிசி 10-கிலோ
2. சீனி 1-கிலோ
3. கோல்டு வின்னர் 1-லிட்டர்
4. சேமியா 400-கிராம்
5. டால்டா 100-கிராம்
6. கறிமசாலா 50-கிராம்
7. ரோஸ்நெய் 50-கிராம்
8. 100-ரூபாய் ரொக்க பணம்
ஒரு குடும்பத்திற்க்கு வழங்கப்பட்டது.
 இந்த புனிதமான காரியம் இனிய முறையில் ஏழைகளுக்கு வழங்க முயற்சிகள் செய்த அனைத்து சகோதரர்களுக்கு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) சார்பாக பரிபூரணமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏற்று நமது இம்மை மறுமை வாழ்வில் ஈடேற்றமளிப்பானாக! ஆமீன்.
               என்றும் அன்புடன்
அமீரகம் மற்றும் அதிரை (TIYA) நிர்வாகம்
Close