ஜாகிர் நாயக் வடிவில் பழனி பாபாவை காண்கிறோம்!

 

ஜாகிர் நாயக் வடிவில் பழனி பாபா வை காண்கிறோம்.

ஷஹீத் பழனி பாபா நமது சமூகத்திற்காக பல தியாகங்களை செய்துள்ளார்கள் அவர்களை தவறானவர்களுக்கு பிடிக்காது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அதே வழியில் சகோதரர் ஜாகிர் நாயக் அவர்களுடைய பேச்சுகளும் சில அறியாதோர், புரியாதோர்(பிடிக்காதோர்). மார்க்க அழைப்பாராக மட்டுமில்லாமல் சமூக துரோகிகள் மற்றும் தவறான அரசியல் வாதிகளுக்கும் எதிராக குரல் கொடுக்க இறைவன் நாடியுள்ளானோ என்னவோ இவர் மீது வீணான பழிகளை சுமத்தியுள்ளனர். இவரையும் சீண்டி பார்க்கின்றனர்.

இஸ்லாமிய பேச்சாளராக மட்டும் அல்லாமல் மாற்று மத சகோதரர்களுயும் இவரின் அறிவாற்றலினால் வெகுவாக கவர்ந்தவர்.

எப்பேர்பட்ட கேள்வியாக இருந்தாலும் தெளிவாகவும் புள்ளி விபரங்களுடன் சரியாக விளக்க கூடிய பேச்சாளர். எந்த ஒரு மதத்தையோ அல்லது சமூகத்தையோ இவர் இழிவு செய்தது கிடையாது.

திரு குர்ஆன், பஹவத் கீதை, பைபில் போன்ற வேதங்களை முழுமையாக ஆராய்ந்தவர் மட்டுமின்றி இதில் எந்த வசனங்களை கூறினாலும் அது எந்த வரியில் வருகின்றது என்பது வரை துல்லியமாக விளக்க கூடியவர் சகோதரர் ஜாகிர் நாயக் அவர்கள்.

அன்று பழனி பாபாவின் வளர்ச்சியையும் அவருடைய எழுச்சி பேச்சுகளையும் கண்டு அஞ்சிய ஃபஸிச சிந்தனை கொண்டோர் இன்று ஜாக்கிர் நாயக்கை கண்டு அஞ்சுகின்றனர்.

எதை வைத்து இவரின் பேச்சு தீவிரவாதத்தை உருவாக்குகின்றது கூறுகின்றார்:

>இவர் ஒரு இஸ்லாமியன் என்பதனாலா!

>தலையில் குல்லா அணிந்தவர் என்பதாலா!

>குர் ஆனை வழியில் வாழ்பவர் என்பதாலா!

(அல்ல)

>இவர் தாடி வைத்தவர் என்பதாலா!

-Mohamed Salih M.R

Close