தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் !

   தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களால் 2014ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது .இதில் ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ,6 வட்டார ஊராட்சி வார்டு உறுப்பினர் ,6 சிற்றூராட்சி  தலைவர் ,81 சிற்றூராட்சி   வார்டு உறுப்பினர் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தஞ்சை மாநகராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர் ,6 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.இத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது .

   வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் செப்டம்பர் 4ம் தேதி பிற்பகல் 3 மணி வரையாகும் .வேட்புமனுக்கள் செப்டம்பர்  5ம் தேதி பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் .வேட்புமனுக்களை விலக்கி கொள்ள செப்டம்பர் 8ம் தேதி வரை  அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது .வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 20ம் தேதி நடைபெறும் .

    ஊரக பகுதிகளுக்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ,வட்டார ஊராட்சி வார்டு உறுப்பினர் ,சிற்றூராட்சி தலைவர்களுக்கு அந்தந்த  ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் , வார்டு உறுப்பினர்களுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ,நகர்ப்புற பகுதிகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்,பேரூராட்சி பகுதிகளுக்கு தொடர்புடைய  பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி  தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் .

இவ்வாறு தஞ்சை மாவட்ட கலெக்டர் திரு .சுப்பையன் தெரிவித்துள்ளார்.              

Advertisement

Close