கீழத்தோட்டத்தில் தாழ்வான மின்கம்பிகளை சரி செய்யக்கோரி அதிரை ஹாலிக் மரைக்கா மனு!

அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் ஹாலிக் மரைக்கா. அதிரையில் முக்கிய பொதுபிரச்சனைகள் குறைபாடுகளை கோரிக்கை மனுக்கள் மூலம் அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

அதிரை அருகே கடலோர கிராமமான கீழத்தோட்டத்தில் மின் தாங்கி கம்பிகள் தாழ்வான நிலையில் கம்பிகள் சென்றுக்கொண்டிருந்தன. இதன் ஆபத்தை உணர்ந்த அவர் அதிரை மின் வாரியத்திடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் காசாங்குளம் துணை மின்வாரிய பொறியாளரிடம் இது குறித்து புகார் மனுவை வழங்கியுள்ளார்.

இவரின் சேவையை அதிரை பிறை சார்பாக மனதார் பாராட்டுகிறோம்.


Close