Adirai pirai
posts

எங்கள் வாழ்க்கை திறந்த வெளி சிறைச்சாலை.ஓவேலி மக்களின் கண்ணீர் துயரம்

எங்கள் வாழ்க்கை திறந்த வெளி சிறைச்சாலை.

ஓவேலி மக்களின் கண்ணீர் துயரம்.

 சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டங்களில் தங்கள் வாழ்க்கை,கலாசாரம்,பன்பாடு,என அத்தனையும் போற்றிப்பாதுகாத்த ஒரு கிராமத்தினர்,கடந்த பல வருடங்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் கொஞ்சம்,கொஞ்சமாக இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 நீலகிரி மாவட்டம்,கூடலூர் வட்டத்திற்குட்பட்டது ஓவேலி பேரூராட்சி இங்கு எல்லமலை,பெரிய சோழன் உட்பட 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில்
விவசாயிகள்,தேயிலை தோட்ட தொழிலாலர்கள் என
முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள்.
 1964ஆம் ஆண்டு இந்தியாவின் ஜமீன் ஒழிப்புத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட போது ஜமீனுக்கு சொந்தமானஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்,காடுகள் அரசுடமையாக்கப்பட்டன.
இதனடிப்படையில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரிவு
17ன்
கீழ் எந்த ஒரு நல திட்ட பணிகளும் நிறைவேற்றப்படவில்லை.சமுதாய கூடம், அங்கன் வாடி
கூடுதல்
பள்ளிக்கூட கட்டிடம்,வழிபாட்டுத்தலம்.உள்ளிட்ட அனைத்து பனிகளுக்கும் வனத்துறை
தடைவிதித்தது.
 இது தொடர்பாக தனியார் எஸ்டேட் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது.இதனால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திறந்த அங்குள்ள மக்கள் கூறுகையில் இலங்கை தமிழர்கள் முள்வேலி முகாம்களில் வசிக்கிறார்கள் நாங்கள் வெளி சிறைச்சாலையில் வசிக்கிறோம் அவ்வளவுதான் எங்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளி.
 எங்கள் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வித வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை கேட்டால் பிரிவு 17க் கீழ் நடக்காதுன்னு சொல்றாங்க.வீடு கட்ட முடியலை எத கேட்டாலும் வனத்துறைக்கு சொந்தமானதுன்னு சொல்றாங்க பிரிவு 17 தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசு தானாக முடிவெடுத்து 11400 ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு தானாக கொடுத்தது.
இதன் பின்னரும் மீதமுள்ள இடத்தைகூட பொதுமக்கள் பயன் படுத்த முடியாமல் தடைவிதித்துள்ளனர்.எத்தனையோ போராட்டம்,ஆர்ப்பாட்டம் நடத்தியும் எந்த முன்னேற்றமும்
இல்லை.DRO,தாசில்தார்
என பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் இல்லை.எங்கள் மக்களுக்கு தரவேண்டிய மானியத்தை தரவில்லை.அடிப்படை வசதிகள் எதுவும் எங்கள் மக்களுக்கு செய்யப்படவில்லை.நாங்கள் எங்கள் போராட்ட களத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆயத்தமாகியுள்ளோம் என்கிறார்கள்.
 ஓவேலி மக்களின் உரிமை போராட்டக் குழுவின் தலைவரும் மனித
நேய மக்கள் கட்சியின் கிளைத்தலைவருமான K.J..பாவா.கூறுகையில் நம்மிடம் “கடந்த
100 ஆண்டுகளுக்கு
மேலாக இப்பகுதியில்
மக்கள் வசிக்கிறாங்க.இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள், முஸ்லிம்கள், மலையாலிகல், ஆதிவாசிகள், என எல்லா மக்களும் இணைந்து வாழ்கிறார்கள். வனத்துறையினரின் கெடுபிடி நாளுக்கு நாள்
அதிகமாகிக்கொண்டே போவதாக அவர் கூறுகிறார்.
 ஓட்டுக்கேட்டு மட்டும் வரும் அரசியல்வாதிகள் எங்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அவர்கள் வந்து வாக்குறுதி மட்டும் தந்துவிட்டு சென்று விடுவார்கள்.எனவே தான் யாரையும் நம்பாமல் மக்களாக இணைந்து
மக்கள் உரிமை போராட்டக்குழுவை ஆரம்பித்து நடத்தி வருகிறோம்.
 கரண்ட் பிரச்சனை தொடங்கி,வீட்டுக்கு நம்பர் வரைக்கும்
எங்களுக்கான கெடுபிடிகள் வனத்துறை அதிகாரிகளால் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு.கடந்த சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா “இப்பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு மக்களுக்கான வாழ்வாதாரம் வழங்கப்படும்” என்று சொன்னாங்க.ஆனா  ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்து இதுவரைக்கும் எதுவும் செய்யப்படவில்லை என்று அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.எனவே எங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் வரை உரிமை போராட்டம் தொடங்கும் என்கிறார்கள் மக்கள்.
 நீதிக்கான மக்களின் போராட்டங்கள் தோல்வியுற்றதாக சரித்திரமில்லை.
 -அனீஸ்.(மாணவர் இந்தியா மாநிலச் செயலாலர்.

Advertisement