அதிரையில் Dr.ஜாகிர் நாயகிற்கு ஆதரவாக SDPI கட்சி நடத்திய ஆர்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

தீவிரவாதிகளுடன் ஜாகிர் நாயக்கை ஒப்பிட்டு பேசும் மத்திய அரசை கண்டித்து அதிரை பேரூந்து நிலையம் அருகே SDPI கட்சி சார்பாக இன்று 12.07.2016 மாலை 4:30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதில் Sdpi  மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் அவர்கள் கண்ட உறையாற்றினார்கள்.  இந்த ஆர்பாட்டத்தில் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக SDPI கட்சியை சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்தும், நடுநிலை தவறிய ஊடகங்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள், மாற்றுமத சகோதரர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

Close