Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரையில் 6 மணி நேரம் மின்வெட்டு! மின்வாரியத்தின் அலெட்சிய போக்கால் அவதிப்படும் மக்கள் (படங்கள் இணைப்பு)


அதிரையில் இன்று நள்ளிரவு சுமார் 3 மணி நேரம் மதுக்கூரில் இருந்து அதிரைக்கு வரும் மின் விநியோகத்தில் ஏற்பட்ட பழுதால் மின் தடை செய்யப்பட்டது. இதனை சரி செய்த பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் இரவில் சரியாக தூக்கமின்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் இன்று பகல் சுமார் 1 மணியளவில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. சுரைக்காய் கொள்ளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததால் இந்த மின் தடை செய்யப்பட்டது. இதனை அடுத்து இரண்டு மணியளவில் மின்சார விநியோகம் செய்யப்பட்டாலும் மீண்டும் மின் தடை செய்யப்பட்டது. மின்வாரியத்தினால் இரவு 7:30 வரை மின்சாரம் இருக்காது