அதிரையில் உப்பு உற்பத்தி நிறுத்தம் !

அதிராம்பட்டினம், மறவக்காடு, ஏரிப்புரக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடற்கரையை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளன .சென்ற ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான சீசன் துவங்கி உற்பத்தி நடந்து வந்தது.

கடந்த ஒரு வாரமாக இரண்டு முறை பெய்த கன மழையால் உப்பள பாத்திகளில் நீர் புகுந்ததால் நேற்று உப்பு உற்பத்தி நிறுத்தபட்டது.இனி மழைக்காலம் என்பதால் அடிக்கடி மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது .எனவே உப்பு உற்பத்தியை  நிறுத்தி வைக்க உப்பு உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர் .இந்நிலையில் ஏற்கனவே உற்பத்தி செய்த உப்பை விற்பனை செய்வதற்கும் ,விலை ஏற்றத்திற்காக சிலர் உற்பத்தி  செய்த உப்பை ஸ்டாக் வைப்பதற்கும் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இது குறித்து உப்பு உற்பத்தியாளர் செல்வராஜ்  கூறுகையில்:கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் துவங்க உள்ளத்தால் உப்பு உற்பத்தியை முடித்து கொண்டு உற்பத்தி செய்த உப்புவை விற்பனை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார் .  

-dinakaran      

Advertisement

Close