டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை கைது செய்ய இயலாது…! மும்பை உளவுதுறை தகவல்!

மஹாராஷ்டிரா மாநில உளவுதுறை (State Intelligence Department) அறிக்கை தாக்கல்…!
மதவாத மோடி அரசும், காவி ஊடகங்களும் இஸ்லாமிய பிரச்சாரகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களைப் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி அவரை தீவிரவாத ஆதரவாளர் என்ற அளவிற்கு சித்தரித்தன.
காவி வெறிபிடித்த பாஜக அமைச்சர்கள் உட்பட அவரை கைது செய்ய வேண்டும் எனவும், அவரது பிரச்சாரத்தை முடக்க வேண்டும் என்றும் கூக்குரலிட்டன.
இதனால் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுள் அனைத்தும் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கின.
தமிழ்நாட்டிலும் கூட அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் போராட்டங்களை அறிவித்து களமிறங்கின.
இதற்கிடையில் அவரது அனைத்து சொற்பொழிவுகளும் மஹாராஷ்டிரா மாநில உளவுதுறையால் (State Intelligence Department) ஆய்வு செய்யப்பட்டன.
இன்று ஆய்வின் அறிக்கையை தாக்கல் செய்த மஹாராஷ்டிரா மாநில உளவுதுறை ஜாகிர் நாயக் அவர்களின் நூற்றுக்கணக்கான (உள்நாட்டு /வெளிநாட்டு) சொற்பொழிவுகளையும் யூடியூப் வீடியோக்களையும் ஆய்வு செய்தோம், இன்னும் வெளியிலிருந்து சில ஆதாரங்களும் தரப்பட்டன,அதை அனைத்தையும் ஆய்வு செய்ததிலும், அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக அமையவில்லை!! ஆக, அவரை கைது செய்ய முடியாது; கைது செய்ய கூடாது; என அறிவித்துள்ளது.
அவதூறு சுமத்திய மோடி அரசும், அவதூறுகளை பரப்பிய காவி ஊடகங்களும் அவமானப்பட்டு நிற்கின்றன தற்போது.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
உண்மையான மார்க்கம் மக்களை சென்றடைந்துவிட கூடாது என மோடி அரசும், காவி பயங்கரவாதிகளும், அதற்கு உறுதுணையாக இருக்கும் காவி ஊடகங்களும் கங்கணம் கட்டி வேலை செய்தாலும் இறுதியில் ஒவ்வொரு முறையும் இஸ்லாம் மற்றுமே வெற்றிபெறுகிறது.
காரணம் இது உலகைப் படைத்த இறைவனின் மார்க்கம்…
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
திருக்குர்ஆன் 61:8

Close