மின்சாரம் தாக்கி கையை இழந்த பட்டுக்கோட்டை சிறுவன் ஆசிபுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது!

பட்டுக்கோட்டையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆசிப் என்ற சிறுவன் விளையாட்ட மின்கம்பிகை தொட்டதில் தூக்கி எறியப்பட்டார். இதில் அந்த சிறுவனின் கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் அச்சிறுவனுக்கு கழுத்து முதல் முதுகு வரை தோல் சேதமடைந்ததால் முதுகில் உள்ள எழும்புகள் தெரிந்தன. இதனை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து சரி செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து அதிரை பிறை யில் செய்திகள் பதிந்தோம். இதில் அதிரையர்கள் பலரும் இச்சிறுவனுக்கு உதவ முன்வந்தனர். சமுக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் இச்சிறுவனுக்கு உதவி கோரி செய்திகள் பரப்பப்பட்டன. இதில் சிகிச்சை தேவையான பணம் சேர்ந்தன. இதனை அடுத்து அச்சிறுவனுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது சிறுவன் ஆசிஃப் நலமுடன் உள்ளார். 

இவருக்காக உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் குடும்பத்தினர் சார்பாகவும் அதிரை பிறை சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Close