அதிரை AFFA அணி பட்டுக்கோட்டை கால்பந்து தொடரில் சாம்பியன்!

பட்டுக்கோட்டை விவேகானந்தா கால்பந்து கழகம் நடத்திய எழுவர் கால்பந்து லீக் தொடர் போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில் பட்டுக்கோட்டை உட்கோட்டத்திலிருந்து 12 அணிகள் பங்கேற்றன.

இறுதி போட்டியை கால்பந்து கின்னஸ் சாதனையாளர் பிச்சினிக்காடு குமரவேல் துவக்கி வைத்தார். அதிராம்பட்டினம் AFFA கால்பந்து கழக அணி- ஆலத்தூர் கால்பந்து கழக அணிகள் மோதியது. இதில் அதிராம்பட்டினம் நண்பர்கள் கால்பந்து கழக அணி வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது.

ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
-file picture 

Advertisement

Close