விபத்தில் சிக்கிய அமர்நாத் யாத்திரை சென்ற இந்துக்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய முஸ்லிம்கள்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பீஜ்பெஹாரா பகுதியில் அமர்நாத் யாத்திரைக்கு 21 பக்தர்கள் மினி பஸ்சில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது பஸ் எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பஸ் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் உடனடியாக களத்தில் இறங்கி தங்கள் உயிரை பணயம் வைத்து காயம் அடைந்தவர்களை மீட்டு தங்கள் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சேர்த்தனர். இந்த விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒரு பக்தர் உயிரிழந்தார். காயம் அடைந்தவர்களை முஸ்லிம்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் சேதம் பெரிதும் தவிர்க்கப்பட்டது.

Source: dinakaran.com

Close