Adirai pirai
posts

உங்கள் பேஸ்புக்கில் உங்களுக்கு தெரியாமல் ஆபாச படம் வந்துள்ளதா???

இன்றைய காலகட்டத்தில் மக்கள் உணவில்லாமல் கூட வாழத் தயாராக உள்ளனர். ஆனால் சமூக வலைத் தளங்களில் நுழையாமல் அவர்களால் சில மணிநேரம் கூட தாக்குபிடிக்கமுடியாது. அந்த அளவுக்கு சமூக வலைத் தளங்கள் நம்மை அடிமையாக்கிவிட்டது. நண்பர்கள் கேட்டால் பலர் ATM பாஸ்வேர்டை கூட எளிதில் தந்து விடுவார்கள், ஆனால் சமூக வலைத் தளங்களின் பாஸ்வேர்டை உயிர்போகிற காரியம் என்றால் கூட யாரும் தரமாட்டார்கள். அந்த அளவுக்கு தனது ரகசியங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றனர்.இதில், மக்கள் தங்களின் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள, கால் செய்ய, சாட் செய்ய, ஃபோட்டோ பதிவேற்றி தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள, தங்களது கருத்துக்களை பதிவு செய்ய என  அனைத்திற்கும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள். இதில் ஒவ்வொருவரும் உலகம் முழுக்க உள்ள நபர்களையும், தன்னோடு படித்த நண்பர்களையும், மேலும் குடும்ப உறுப்பினர்களையும் ஆண், பெண் விகிதசாரமின்றி அனைவரையும் நண்பர்களாகக் கொண்டிருப்பார்கள்.


1.முதலாவதாக இது போன்ற ஸ்பேம் புரோகிராம்கள் அதிக அளவில் ‘கேம்’களின் மூலமாகவே பரவுகின்றன. ஃபேஸ்புக்கில், நாம் விளையாடு கேம்களில், ஒரு மூலையில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும். அதனை, க்ளிக் செய்வதென்பது , நமக்கு நாமே ஆபத்தில் மாட்டிக்கொள்வதற்குச் சமம்.

2.அடுத்து இது போன்று வரும் புரோகிராம்களில் சிலர் உண்மையிலேயே பலான வீடியோக்களை அனுப்புகின்றனர், சிலர் அது மாதிரியான படங்கள் பார்க்கும் ஆர்வத்தில் கிளிக் செய்ய, அந்த புரோகிராம் அவர்களின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் பல பேருக்கு டேக் ஆகிறது.

3. இது போன்ற விளம்பரங்களை, க்ளிக் செய்ததும், அது தனி பாப் அப் விண்டோ ஒன்றை திறக்கும். அவசரகதியில் அதில் நாம் தொடர்ந்து okay என்பதை அழுத்தும் போது, நமது அக்கௌன்ட் ஹேக்கர்கள் வசம் செல்ல வாய்ப்புக்கள் அதிகம்.


4. ஃபேஸ்புக்கில், தற்போது அதிக நபர்கள் பயன்படுத்துவது, “நான் போன ஜென்மத்தில் யாராக இருந்தேன்?”, “ரஜினியின் எந்தக் கதாப்பாத்திரம் , உங்களுக்கு செட் ஆகும்” போன்ற கேள்விகள் நிச்சயமாய் ஒரு அப்ளிகேஷன் இருக்கும். அதனை பயன்படுத்துவது தவறல்ல. அவற்றை க்ளிக் செய்ததும், அது உங்களிடம் ” நான் உங்களது பக்கங்களை ஆராய அனுமதி அளிக்க முடியுமா? என கேட்கும். அவற்றிற்கு நீங்க அனுமதி அளிக்கலாம். ஆனால், சில அப்ளிகேஷன்கள், ” உங்கள் சார்பாக , நான் உங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் இட்டுக்கொள்ளலாமா ? ” எனக் கேட்கும். அவற்றைத் தவிர்த்தல் நலம்.

இதனை தவிர்க்கும் வழி:

படம்-1: முதலில் உங்களின் செட்டிங்ஸ்(Settings) கிளிக் செய்து உள் செல்லவேண்டும்.

படம்-2: அடுத்ததாக இடது புற ஓரத்தில் இருக்கும் பயன்பாடுகள்(Apps) அமைப்பினுள் செல்லவேண்டும்.

படம்-3:மேலே இருக்கும் கேம் பக்கங்கள், மற்றும் இதர பக்கங்கள் அனைத்தும் நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ லைக் செய்த பக்கங்கள் அல்லது உங்களின் நண்பர்கள் மூலமாக நீங்கள் டேக் செய்யப்பட்ட பக்கங்கள். இதன் மூலமாக ஸ்பேம் ப்ரோகிராம்கள் உங்கள் முகநூல் கணக்கிற்கு உள் நுழைகின்றன.

படம்-4 மற்றும் படம்-5-ல் காட்டியுள்ளது போல் அவற்றை உங்கள் கணக்கிலிருந்து நீக்கவும், முடிந்தவரை எல்லா பக்கங்களையும் நீக்குவது சிறந்தது.

இப்போது நீங்கள் அந்த பக்கத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்படுவீர்கள், சில நாட்கள் கழித்து வேறு ஒரு நபர்மூலமாக, வேறு பக்கத்திலிருந்து உங்கள் கணக்கில் அத்தகைய ஸ்பேம் புரோகிராம்கள் வரும். இனி இது போல் பக்கங்களும், கேம் அழைப்புகளும் ஸ்பேம் புரோகிராம்களும் உங்கள் நண்பர்கள் வாயிலாக வராமல் இருக்க படம்-6-ல் காண்பிக்கப்பட்டுள்ளது போல் “பயன்பாடுகள், இணையதளங்கள் மற்றும் பிளக் இன்கள்(Apps, Websites and Plugins)”- ஐ டிசேபிள் செய்யவும்.

படம்-7-ல் உள்ளது போல் பிளாட்பார்மை முடக்கினால், பின்வரும் காலங்களில் இதுபோன்று தேவையற்ற போர்னோ வீடியோக்கள், கேம் அழைப்புகள், மற்றும் ஸ்பேம் புரோகிராம்களில் இருந்து உங்களுடைய கணக்குகளை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

-ஜெ.அன்பரசன்

நன்றி: விகடன்