பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 18ம் தேதியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்!

​பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 18ம் தேதியில் இருந்து அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 25ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் தயாராகி உள்ளதாகவும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதேபோல், தனித்தேர்வர்களும் அந்தந்த தேர்வு மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Close