ஜாகிர் நாயக் இந்தியாவில் அமைதியை பரப்பினார்! திக் விஜய் சிங் கருத்து!

ஜாகீர் நாயக் நாட்டில் அமைதியை பரப்பினார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் திக்விஜய் சிங் கூறிஉள்ளார்.

22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக அவதூறான குற்றச்சாட்டு எழுந்தது. இதனை நிருபிக்க முடியாமல் மத்திய அரசும், மராட்டிய அரசும், ஊட்கங்களும் திணரி வருகின்றன.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பேசிஉள்ள திக்விஜய் சிங், “ஜாகீர் நாயக் இந்தியாவில் அமைதிக்கான கருத்துக்களை பரப்பினார்,” என்று கூறிஉள்ளார். ஜாகீர் நாயக் நமது சட்டத்தை மீறி ஏதேனும் பேசியிருந்தால், மத்திய அரசும், மராட்டிய அரசும் வழக்குப்பதிவு செய்யாமல் பதுங்குவது ஏன்? என்று திக்விஜய் சிங் டுவிட்டரில் கேள்வி எழுப்பிஉள்ளார்.

Close