அதிரை புதுமனைத்தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்!

அதிரை புதுமனைத்தெருவில் கடந்த பல அண்டுகளாக மின்கம்பம் ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் அதன் அடி பகுதியில் சிமெண்ட் பகுதி முழுவதும் சேதமடைந்து உள்ளே உள்ள கான்கிரிட் கம்பி வெளியே தெரிகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தால் பொதுமக்கள் ஆச்சத்துடன் அதனை கடந்து செல்லும் நிலை உள்ளது. இது குறித்து கடந்த 20 தினங்களுக்கு முன்னர் அதிரை ஹாலிக் மரைக்கா அவர்களால் புகார் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் அதிரை மின்வாரியத்தினர் அலெட்சியமாக உள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி இந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Close