ஜாகிர் நாயக் மீது அவதூறுகளை அள்ளிவீசி நக்கி பிழைப்பை வெளிப்படுத்தி இருக்கும் நக்கீரன்!


இந்தியா முழுவதும் ஜாகிர் நாயக் குறித்த அவதூறுகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மீடியாக்கள் நாளுக்கு நாள் தங்கள் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது குறித்து பல்வேறு எதிர்ப்புகளும் போராட்டங்களும் வழுத்து வருகிறது. 

ஜாகிர் நாயக் மீது அவதூறு பரப்பிய வங்காளதேசத்தில் டெய்லி ஸ்டார் நாளிதழே அதற்கு மன்னிப்பு செய்தியை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது நக்கீரன் இதழ் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் விதமான காரியத்தை மேற்கொண்டுள்ளது. 

ஜாகிர் நாயக் குறித்து “படித்தது MBBS, செய்வதோ மதபோதனை” என்ற தலைப்பில் அந்த நாளிதழில் பல்வேறு அவதூறுகளை பரப்பியுள்ளது. இதற்க்கு முஸ்லிம்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்வது அவசியம்.

Close