காஷ்மீரில் இறந்த இந்து பெண்ணின் இறுதி சடங்கை நிறைவேற்றிய முஸ்லிம்கள்!


கஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறாத இந்துக் குடும்பங்களில் தீபக் மல்ஹோத்ராவின் குடும்பமும் ஒன்று. இவர்கள் அங்கு வசிக்கும் முஸ்லிம்களுடன் வாழ்ந்து அவர்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்கள்.

சமீபத்தில் தீபக் மல்ஹோத்ராவின் தாயார் மரணமடைந்துள்ளார். தற்பொழுது கஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த போதும் தீபக் மல்ஹோத்ராவின் தாயருக்கான இருதிச் சடங்கில் பங்கேற்க தங்கள் உயிரையும் துச்சமென மதித்து அப்பகுதி மக்கள் அனைவரும் திரண்டுள்ளனர். இந்த ஒரு நிகழ்வு கஷ்மீரில் இந்து முஸ்லிம் பிளவு இருக்கிறது என்று வெகுஜன ஊடகங்கள் பரப்பி வரும் பொய் பிரச்சாரத்திற்கு தகுந்த பதிலாக அமைந்துள்ளது.

கஷ்மீர் மக்கள் மத பேதமின்றி அங்கு வாழும் அனைவருடணனும் ஒற்றுமையுடன் இருக்கின்றனர் என்பதற்கு இது போன்ற பதற்றமான சூழ்நிலையிலும் அன்பின் காரணமாக மற்றொருவரின் துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்வதே போதுமான சான்றாக இருகின்றது.

-புதிய விடியல்

Close