சென்னை விமான நிலையத்தில் உயிர்தப்பிய 160 FLY DUBAI விமான பயணிகள்!

BL01CHENNAIAIRPORT_1348281fசென்னை விமான நிலையத்தில் இன்று ஏற்பட்ட இரு வேறு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பிளை துபாய் விமானம் புறப்பட தயாராக இருந்தது. புறப்பட்ட சில நொடியில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான பொறியாளர் வந்து கோளாறை சரி செய்தனர். 3 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் 160 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது போல் உள்நாட்டு புறப்பாடு 1 வது நுழைவு வாயிலில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியில் இருந்து லேசான தீ பிடித்தது. இதனால் உடனடியாக மின்கசிவு சீரமைக்கப்பட்டது. இது போன்ற இரு சம்பவங்களால் காலையில் விமான நிலைத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Close