அதிரை பேரூராட்சி ஊழியர்களின் சோம்பேறித்தனம்! வீணடிக்கப்படும் மக்களின் வரிப்பணம்!

image

அதிரையில் ஏதேனும் ஒரு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் விளக்கு எறியவில்லை என்று ஒரு முறைக்கு புகார் அளித்து பேரூராட்சியால் அந்த தெருவிளக்கை சரி செய்யக்கோரி ஊழியர் அனுப்பப்படுவார். அவ்வாறு தெரு விளக்கை சரி செய்வதற்காக வரும் ஊழியர் எறியாத அந்த விளக்கில் என்ன பிரச்சனை என்பதை கண்டறியாமல் சாதாரணமாக தன் பாக்கெட்டில் வைத்திருந்த QUICK LAMP ஒன்றை பொருத்தி விட்டு சென்று விடுகின்றனர். மக்களும் நமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது என்று சென்றுவிடுகின்றனர்.

இதில் நாம் சிந்திக்க வேண்டிய விசயம் என்னவெனில் இந்த QUICK LAMP ஒன்று ரூபாய் 250 முதல் 300 வரை ஆகின்றது. ஆனால் அந்த தெருவிளக்கில் என்ன குறை என்பதை சோதித்துபார்த்தால் 50 முதல் 100 ரூபாய் வரையிலான சிறிய கோளாரு தான் இருக்கும். ஏன் ஒரு ட்யூப் லைட்டின் விலையே 50 ருபாய் தான் இருக்கும். சாலையில் அதிக வெளிச்சமும் தரும். ஆனால் இந்த QUICK LAMP இல் சாலையில் ஒளி விழுவதற்கு விளக்கின் மேற்படுதியில் கப் ஒன்றை பொருத்த வேண்டும். ஆனால் அதனையும் அவர்கள் பொருத்தாமல் செல்வதால் விளக்கு வைத்தும் பயணின்றி தேவையற்ற இடங்களில் வெளிச்சம் விழுகின்றது.

இவ்வாறு பேரூராட்சி ஊழியர்கள் தங்கள் வேலை பழுவை குறைக்க மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது தேவையற்றது. இதனை அதிரை பேரூராட்சி நிர்வாகம்  உடனடியாக கவணத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Close