அதிரை சேர்மன் வாடி ஆணை விழுந்தான் குளம் ஆக்கிரமிப்பு!

 அதிரை
சேர்மன் வாடி   அருகே  அமைந்து உள்ள ஆணை விழுந்தான் குளம் (யானையாம்  குளம் ) அதிரையின்  மைய
பகுதியில்   உள்ள
இந்த  குளம் நமதூர் மக்களுக்கு பல ஆண்டு காலமாக நீர் தேவையை
பூர்த்தி செய்து வந்தது .தற்போது சில வருடங்களாக தண்ணீர் இல்லாமல் வரண்டு
கிடக்கும்  இந்த குளம் சுகாதார சீர்கேடு ஏற்படும் அளவுக்கு  குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது .தற்போது சொல்ல போனால் இந்த
குளம் குப்பை தொட்டியாக    மாறிவிட்டது
எனலாம் .இந்த குளம் அரசின் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது .

அண்மை
காலமாக இக்குளம் சரிவர பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் ஆள் நடமாட்டம் குறைந்து
காணப்படுவதாலும் இரவு நேரத்தில் சரிவர மின் விளக்கு இல்லாத காரணத்தினாலும் இந்த
குளம்  குற்ற செயல்களுக்கு உகந்த இடமாக உள்ளது .

 

            

தற்போது
சில மாதங்களாக இந்த குளம் ஆக்கிரமிப்பு 
பட்டு உள்ளது என்பதும்
குறிபிடப்பட்டது.
இது குறித்து நமதுரை
சேர்ந்தார் சமூக ஆர்வலர்கள் சிலர் நம் அதிரை பிறை நிர்வாகிகளிடம் அளித்த தகவலின்
அடிப்படையில் அதிரை பிறை நிர்வாகிகள் 
நேரில் பார்வையிட்டது . இதில் இந்த குளம் ஆக்கிரமிப்பு செய்தது
உறுதியாபட்டது .

விரைவில்
இந்த ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிரை பிறை சார்பாகவும் அங்கு
வசிக்கும் பொது மக்கள் சார்பாகவும் வைக்கப்படுகிறது.  
(மறுபதிப்பு)
Close