Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ECR இல் பலரின் கவனத்தை ஈர்த்த CBD சமுக சேவகர்கள் (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் கிரெசெண்ட் பிளட் டோனார்ஸ் என்ற பெயரின் இரத்தான அமைப்பு ஒன்று இளைஞர்களால் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிரையிலும் இந்த CBD துடிப்புடன் செயல்பட்டுவருகிறது. இவர்கள் இரத்ததானத்தை மட்டும் செய்யாமல் சமுக, சுற்றுச்சூழல் விசயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தங்கள் சேவைகள் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இவர்களால் துவங்கப்பட்ட “விபத்தில்லா தேசம் உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று (17.07.2016) பகல் 2 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்துநிலையம் முதல் காதிர்முகைதீன் கல்லூரி வரை சாலையில் இருபுறமும் இருக்கும் மணல்களை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம், அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்துக்கொண்டு மணலை அகற்றினர்.

இதனை சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் பொழுது கண்ட பொதுமக்களும் ஆர்வத்துடன் இவர்களுடன் கலந்துக்கொண்டு மணலை அப்புறப்படுத்தினர். CBD க்கு அதிரை பிறையின் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

IMG_9392 IMG_9398 IMG_9409 IMG_9420 IMG_9431 IMG_9437 13707669_1135507809824229_608426426351050701_nIMG_9439 IMG_9453 IMG_9471 IMG_9493 IMG_9566 IMG_9608 IMG_9626

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy