அதிரை உஸ்வதுர் ரசூல் பெண்கள் மதர்ஸாவின் ஆண்டு விழா நிகழ்ச்சி

அதிரை செக்கடி பள்ளி அருகில் உள்ள உஸ்வதுர் ரசூல் பெண்கள் மதர்ஸாவின் ஆண்டு விழாவில் 12 மாணவிகள் பட்டம் பெற்றனர். இந்நிகழ்ச்சி இன்று காலை 10:15 மணியளவில் அப்பாஸ் ஹாஜியார் தலைமையில் செக்கடி பள்ளியில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சி சென்னை அஷ்ரஃப் பள்ளியின் துணை இமாம் ஹாஜி இக்பால் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது. இதில் ஹாஜி இக்பால் ஹஜ்ரத் கிராத் ஓதி துவங்கிவைத்தார். இதில் முஹம்மது அலி ஹஜ்ரத் இல்மை பற்றியும், முஹம்மது குட்டி ஹஜ்ரத் இம்மதர்ஸாவின் வரலாற்றுத் தொகுப்பை பற்றியும் பேசினார்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close