அதிரையில் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இலவச மிக்சி,கிரைண்டர்,பேன் வழங்கும் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் 8வது வார்டுக்கு உட்பட்ட கடற்கரை தெரு,சேக் உஸ்மான் தெரு,ரயில்வே ஸ்டேஷன் தெரு ஆகிய மூன்று தெரு  தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மிக்சி,கிரைண்டர்,பேன் ஆகியவைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை ஆட்சியர்   திரு.சுப்பையன்  ,தஞ்சை மாவட்ட MP.திரு.பரசுராமன்  ,அமைச்சர் R.வைத்திலிங்கம். அதிராம்பட்டினம் பேருராட்சி தலைவர் S.H. அஸ்லம், அதிராம்பட்டினம் பேருராட்சி துணை தலைவர் திரு.பிச்சை ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் 643 குடும்பஅட்டை தாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டன்.

இதில் பயனாளிகள், பொதுமக்கள், அதிரை பிறை, ஜெயா நியூஸ் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்  

-இலியாஸ், மொஹிதீன், ஜுபைர் (அதிரை பிறை)

Advertisement

Close