Adirai pirai
உள்ளூர் செய்திகள்

வட்டியில்லா அதிரையை ஏற்படுத்த முயற்சித்துவரும் அமெரிக்கா வாழ் அதிரையர்கள்!

அமெரிக்காவில் அதிரையர்கள் பலர் தொழில்நிமித்தமாக தங்கி வருகின்றனர். இவர்கள் அங்கு அசோசியேஷன் ஒன்றை துவங்கி தாங்கள் பெரும் ஊதியத்தில் தங்களால் இயன்ற அளவு மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இவர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த அசோசியேஷனில் உள்ள அமெரிக்காவாழ் அதிரையர்கள் தாங்கள் பெரும் ஊதியத்தில் மாதாமாதம் 25 டாலர்கள் வழங்கவேண்டும். இந்நிலையில் அதிரையை சேர்ந்த யாரேனும் தொழில் துவங்கினால் அவர்களுக்கு 10,000 டாலர் வசூலித்து சேர்க்கப்பட்ட பணத்திலிருந்து வழங்கவேண்டும். இவ்வாறு தான் வாங்கி பணத்தை பெற்றுக்கொண்ட பயணாளி மாதாமாதம் தவணை முறையில் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவேண்டும்.

இதுமட்டுமின்றி ஊரில் ஏதேனும் மரணம் ஏற்பட்டால் அந்த குடும்பத்துக்கு உதவி தேவைபடுமானால் அவர்களுக்கு 10000 டாலர்கள் வழங்கப்பட்டு அதுவும் தவணை முறையில் திருப்பி வாங்கப்படும். இதன் மூலம் அதிரையில் வட்டி என்னும் அரக்கணை ஒழிக்க இவர்கள் முயற்சித்து வருகிறார்கள். இதன் மூலம் பலர் பயணடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இன்று நடைபெற்ற மஷூராவில் அங்குள்ள அதிரையர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த மேலான முயற்சியை மேற்கொண்டு வரும் அமெரிக்காவாழ் அதிரையர்களின் அசோசியேஷனுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.imageimage

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy