Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

இரவு நேரங்களில் ஓப்பி அடிக்கும் அதிரை மின்வாரிய ஊழியர்கள்!

அதிரை மின்சார வாரியத்தின் அலட்சிய போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பொதுமக்களின் புகார்களை சரிவர யேற்காமல் அலட்சியமாக இலுத்தடிக்கும் இவர்களின் செயல்பாடுகளால் பொதுமக்கள் இன்று மின்சார வாரியம் சென்று முறையிட்டனர். 

மின் வாரிய அதிகாரியிடம் இரவு நேரங்களில் தொலைபேசி எடுப்பதில்லையே என்று கேட்டதற்க்கு தொலை பேசி வயர் சரியில்லை என்று சிறு குழந்தை போல பதில் அளித்துள்ளார். காலையில் மட்டும் உபயோகமாகும் அதிக தொழில் நுட்பம் கொண்ட கருவியோ என்னவோ. இதனை யேற்காமல் முறையிட்ட பொதுமக்களிடம் வெவ்வேறு துறையினர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஊழியர்கள் பற்றா குறையாக இருக்கின்றார்கள் என்கிற குற்றசாட்டை முன் வைத்த மின் வாரிய ஊழியர். இருக்கும் ஊழியர்களே சரியாக பணி புரிவதில்லை என்று பொது மக்களால் குற்றம் சாட்டபட்டது. இறுதியில் இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டுமென கண்டிப்புடன் தெரிவித்தி அங்கிருந்து வெளியேறினர்.