காயல்பட்டினத்தில் பதற்றம்! இரவோடு இரவாக கோவில் கட்ட முயற்சி!

காயல்பட்டினம் – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் கே.எம்.டி. மருத்துவ மனைக்கு அருகில் சில ஆண்டுகளுக்கு முன்னர் – சாலையோரத்தில் திடீரென கோவில் ஒன்று அமைக்கப்பட்டது. இது குறித்த சர்ச்சை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு அதன் ஓலை கூரை கட்டுமானம் தீப்பற்றி எரிந்ததாக தெரிகிறது. 

தீப்பற்றி எரிந்த ஓலை கூரை கட்டுமானத்தை, ஹாலோ பிளாக் கற்கள் கொண்டு ஒரு சிலர் உடனடியாக கட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியது.

இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மறியல் செய்ததால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை IPS சம்பவ இடத்திற்கு வந்தார். இரு தரப்பிலும் ஆறு பேர் அழைக்கப்பட்டு, திருச்செந்தூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

பேச்சு வார்த்தையின் இறுதியில், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில கட்டப்பட்டுள்ள கோட்டை சுவர் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவில் ஆகியவற்றை இன்றே – நெடுஞ்சாலை துறையின் உதவி மூலம் இடிப்பது என இரு தரப்பினரும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்த நகல்

Advertisement

Close