தஞ்சாவூர் மாவட்ட SP யாக J.மகேஷ் நியமனம்!

தமிழகம் முழுவதும் 14 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் சென்னை வடக்கு மண்டல ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டார். உளவுத்துறை ஐ.ஜி வரதராஜு திருச்சி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜே.மகேஷ் தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை சட்டம் ஒழுங்கு ஐ.ஜி பாஸ்கரன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் மயில்வாகனம் திருச்சியில் இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு ஐ.ஜி சேஷசாயி தலைமை அலுவலக கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கோயம்பத்தூர் ஐ.ஜி ஸ்ரீதர் சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் தலைமை அலுவலக ஐ.ஜி அருணாசலம் மத்திய குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Close