அதிரை-மண்ணடி சென்று வர புதிய பேருந்து சேவை துவக்கம்!

imageஅதிரையில் சென்னைக்கான ஆம்னி பேருந்து சேவை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் அதிரையில் அல் கஸ்வா ட்ரான்ஸ்போர்ட் A.R.ட்ராவல்ஸ் நிறுவனத்தின் புதிய பேருந்து கடந்த ஒரு வாரமாக புதிதாக துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது AC பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் AC இல்லாத பேருந்து சேவையும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதிரை ஆலடித்தெருவில் இதன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தொண்டியிலிருந்து வரும் இப்பேருந்து அதிரை வழியாக பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி, சென்னை விமான் நிலையம் சென்Dசென்னை மண்ணடி வரை செல்லும். அதிரையில் சேர்மன் வாடியில் பயணிகள் ஏறுவதற்காக பேருந்து நிறுத்தப்படும். இதற்கு அதிரையர்கள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close