சவூதி அரேபியாவில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்பு

சவூதி அரேபியாவின் தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தின் வானியல் துறை தலைவர் டாக்டர் மன்சூர் பின் அட்டானி அவர்கள் தெரிவித்துள்ளதாவது இந்த வாரம் இறுதி வரை அசிர், பஹா, நஜ்ரான், ஜஜான், தாயிஃப் மற்றும் அதற்கு அருகானையில் உள்ள பகுதிகள் மற்றும்  மக்காவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும், ரியாத் மற்றும் சவூதியின் மத்திய பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளார்.

-அரப் நியூஸ்

Close