குவைத் வாழ் அதிரையர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

குவைத்தில் விசாவை மாற்றிக் கொள்ள 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குவைத்தில் வீட்டு வேலை செய்து வருபவர்கள் தங்களது விசாவை தனியார் துறைகளில்
வேலைக்கு மாற்றிக் கொள்வதற்கு ஆகஸ்ட் 17 ந் தேதி முதல் 3 மாதங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று குவைத் தொழிலாளர் நல அமைச்சர்
தெரிவித்துள்ளார். 

குவைத்தில் தனியார் கம்பெனிகள் வெளி நாட்டில் இருந்து
தொழிலாளர்கள் நியமனம் செய்வது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. எப்போது
மறுபடியும் அனுமதிக்கப் படும் என்பது சம்பந்தமாக எதுவும் முடிவு செய்யப் படவில்லை.

-ரஹ்மத்துல்லா

Advertisement

Close