பிளஸ்2 சிறப்பு துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!

imageபிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த மே வெளியானது. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக சிறப்புத் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.

சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், துணை தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்ட மாணவர்கள் விடைத் தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Close