அதிரை மாணவர் மாவட்ட அளவிலான 100 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் வெற்றி

அதிரை காதிர் முகைதீன் பள்ளி 12ம் வகுப்பு மாணவரும் அதிரை AFFA  கால்பந்து அணியின் முக்கிய இளம் வீரருமான அசிப் அகமது அவர்கள் இனறு கரம்பயம் அரசு பள்ளியில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் காதிர் முகைதீன் பள்ளி சார்பாக  கலந்து கொண்டு முதலிடத்தை தட்டிசென்றுள்ளார்.

அவருடைய மின்னல் வேக ஓட்டத்தை AFFA அணிக்காக அவர் விளையாடும் போதே நாம் கண்டிருப்போம். இது இவருக்கு இந்த ஓட்டப்பந்தையத்தில் முதலிடம் பிடிப்பதற்க்கு உதவியிருக்கிறது.

100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம் பெற்றதன் மூலம் அதிராம்பட்டினத்துக்கும் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளிக்கும் AFFA அணிக்கும் இவர் பெறுமை தேடி தந்துள்ளார். இவர் விளையாட்டிலும் கல்வியில் மேன்மேலும் வெற்றியடைய மனமார வாழ்த்துகிறது அதிரை பிறை.

Advertisement

Close