அதிரை A.J பள்ளியில் நடைபெற்ற ஜூம்மா தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

அதிரை A.J பள்ளி ஜும்மா பள்ளிக்கான அங்கிகாரத்தை உலமா சபையிடம் பெற்றதை அடுத்து இன்று முதல் நாள் ஜும்மா தொழுகை நடைபெற்றது. ஜும்மா தொழுகைக்காக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பள்ளியின் இடம் விசாலமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

அனைத்து வேலைகளும் நிறைவடைந்த நிலையில் இன்று பள்ளி ஜும்மா தொழுகை நடைபெறும் என அதிரை பிறை உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாகவும் ஆட்டோ ஒளிபெருக்கி மூலமாகவும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இதனை அடுத்து இன்று ஜும்மா தொழுகை நடைபெற்றது. இதற்க்கு முன்னதாக நடைபெற்ற ஜும்மா உரையை மௌலானா இத்ரிஸ் முஹம்மது அவர்கள் நிகழ்த்தினார். இறுதியாக துஆ வுக்கு பிறகு தொழுகைக்கு வருகை தந்த அனைவருக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.

இன்றைய முதல் நாள் ஜும்மா தொழுகையில் ஊர் முக்கியஸ்தர்கள், அதிரையின் அனைத்து பகுதி முஹல்லா வாசிகள், சுற்றுவட்டார ஊர் மக்கள் சிறுவர்கள் என அயிரக்கணக்கானோர் வருகை தந்தனர்.

Advertisement

Close