அதிரை DYNAMIC கடையில் புகுந்த திருடன்-CC TV கேமராவில் பதிவான காட்சிகள் (படங்கள் இணைப்பு)

அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு பாவா மெடிக்கல் அருகில் உள்ளது டைனமிக் செல்காம். கடந்த ஆண்டு 3 வது கிளையான இங்கு திறக்கப்பட்டது. தினமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த கடையினை நேற்று இரவு கடையை அடைத்து பூட்டிவிட்டு வீடு சென்றனர். இன்னிலையில் நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் திருடர்கள் (4 நபர்கள் என சொல்லப்படுகிறது) 3 பூட்டுகளையும் உடைத்து கடையை திறந்து உள்ளே சென்று திருட முயன்றுள்ளனர். இந்நிலையில் இதனை கண்ட ஒருவர் திருடர்களை கண்டு விசாரித்ததில் அவர்கள் பதில் அளிக்காமல் எதையும் எடுக்காமல் தலைதெறிக்க ஓடிவிட்டனர்.

கடையில் உள்ள CC டிவி கேமராவில் ஒருவரின் முகம் பதிவாகியுள்ளதாகவும் இது குறித்து போலிசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கடை உரிமையாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர். இந்நிலையில் அருகில் உள்ள பாவா மெடிக்க மற்றும் ஹூருல் ஈன் ஆகிய கடைகளிலும் அவர்கள் திருட முயற்சித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

imageimageimageimageimageimage

Close