Adirai pirai
education and jobs தமிழகம்

முத்துப்பேட்டையில் பாத்திரம் கழுவும் இயந்திரத்தை வடிமைத்த பள்ளி மாணவி

imageமுத்துப்பேட்டை, – கிரைண்டரை பயன்படுத்தி பாத்திரம் கழுவும் இயந்திரத்தை பள்ளி மாணவி வடிவமைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 வகுப்பு படிப்பவர் பவித்ரா. இவர் மாவு அரைக்க பயன்படும் கிரைண்டரை பயன்படுத்தி எளிய முறையில் பாத்திரம் கழுவும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். இதில் மாவு அரைக்கும் கல்லை அகற்றிவிட்டு அதில் பாட்டில் கழுவும் பிரஷ் சிலவற்றை ஒன்றாக இணைத்து கைப்பிடி மூலம் தேவைக்கேற்ப திருப்புவது போன்று அமைத்துள்ளார். கிரைண்டரில் தேவைக்கேற்ப தண்ணீர் நிரப்பி, கழுவி முடித்த பின் அசுத்தமான தண்ணீரை வெளியேற்ற ஒரு பைப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் நன்னிலத்தில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் போட்டியில் தேர்வு பெற்ற 16 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக தேர்வு பெற்றது.

இந்நிலையில் பவித்ராவுக்கு பாராட்டு நிகழ்ச்சி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவி இயந்திரத்தை இயக்கி செயல்விளக்கம் அளித்தார். தலைமையாசிரியை வாசுகி, அறிவியல் ஆசிரியர் சுரேஷ் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும் மாணவியை பாராட்டினர்.
இதுபற்றி மாணவி பவித்ரா கூறுகையில், நான் உருவாக்கி உள்ள இந்த இயந்திரம், நாளை இந்த உலகில் வரப்போகும் ஒரு பயனுள்ள இயந்திரம். துணி துவைக்க, மாவு அரைக்க, சமைக்க, எண்ணற்ற கருவிகள் வந்த போதும் பாத்திரங்களை கழுவுவதற்கு கருவிகள் நடைமுறையில் இல்லாதது குறையாகவே இருந்து வந்தது. இதன்மூலம் தினம் வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்களை கழுவுவதற்கு இனி பெண்கள் கஷ்டப்படவேண்டாம். மேலும் இது ஒரு சோதனை முயற்சியே. இதில் மேலும் சில அம்சங்களை சேர்க்க உள்ளேன் என்று கூறினார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy