Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் இன்று நள்ளிரவு 3 கடைகள் திருட்டு முயற்சி! (படங்கள்)

அதிரையில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று விட்டு எதையும் எடுக்காமல் ஓடி விட்டனர். இந்நிலையில் இந்த பிரச்சனை மறைவதற்குள் அதிரை மெயின் ரோட்டில் உள்ள மேலும் 3 கடைகளில் இன்று நள்ளிரவில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதிரை மெயின் ரோடு டாக்டர் ஹனீப் மருத்துவமனை எதிரில் உள்ள கவரிங் நகை கடை, மளிகை கடை மற்றும் அதிரை காவல் நிலையம் அருகில் உள்ள மேலும் ஒரு கடை என மொத்தம் 3 கடைகளில் திருட்டு முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

இந்த திருட்டில் எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டது? திருடியது யார்? எத்துனை மணிக்கு திருடினார்கள்? என்பது குறித்து அதிரை போலிஸார் விசாரித்து வருகிறார்கள்.image image

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy