Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை மெயின் ரோட்டு சேட்டு ஹார்ட்வேர் கடையின் CC TV கேமராவை உடைத்து திருடிய திருடர்கள்! (படங்கள் இணைப்பு)

imageசில நாட்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று விட்டு எதையும் எடுக்காமல் ஓடி விட்டனர். இந்நிலையில் இந்த பிரச்சனை மறைவதற்குள் அதிரை மெயின் ரோட்டில் உள்ள மேலும் 3 கடைகளில் இன்று நள்ளிரவில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதிரை மெயின் ரோடு டாக்டர் ஹனீப் மருத்துவமனை எதிரில் உள்ள ஆய்ஷா  பேபி கடையில் பூட்டு உடைக்கப்படுள்ளது, அதன் அருகில் உள்ள செலக்‌ஷன் மளிகை கடையிலும் திருட்டு முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

இதில் அதிரை அரசு நம்பர் 1 பள்ளி அருகாமையில் உள்ள அம்பிகா எலெக்ட்ரிகல்ஸ் (சேட்டு ஹார்ட்வேர்) கடையில் பூட்டை உடைத்து CC TV கேமராவினை உடைத்து சென்றுள்ளனர். அதற்கான படங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டில் எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டது? திருடியது யார்? எத்துனை மணிக்கு திருடினார்கள்? என்பது குறித்து அதிரை போலிஸார் விசாரித்து வருகிறார்கள்.imageimageimageimage

களத்தில்: ரியாஸ் (அதிரை பிறை)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy