அதிரையில் நடமாடும் மர்ம நபர்கள்!!! அவசர எச்சரிக்கை!!!

imageஅதிரையில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2 மாதங்களாக அதிரையில் நடந்த திருட்டு சம்பவங்களுக்கு இவர்கள் காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அதிரையில் வீடு வீடாக EB ஊழியர் போலவும், கேஸ் சப்லையர் போலவும், புடவை, புர்கா, பெட்சீட், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பவர் போலவும், தேங்காய் பரிப்பவர் போலவும் அல்லது கணக்கெடுப்பவர் போலவோ சந்தேகப்படும்படி மர்ம நபர்கள் வலம் வருகிறார்கள். அதிரைக்கு அருகாமையில் உள்ள பல ஊர்களில் இது போன்ற மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

நேற்று முன் தினம் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று விட்டு எதையும் எடுக்காமல் ஓடி விட்டனர். இந்நிலையில் இந்த பிரச்சனை மறைவதற்குள் அதிரை மெயின் ரோட்டில் உள்ள மேலும் 3 கடைகளில் இன்று நள்ளிரவில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதிரை மெயின் ரோடு டாக்டர் ஹனீப் மருத்துவமனை எதிரில் உள்ள ஆய்ஷா பேபி கடையில் பூட்டு உடைக்கப்படுள்ளது, அதன் அருகில் உள்ள செலக்‌ஷன் மளிகை கடையிலும் திருட்டு முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

இதில் அதிரை அரசு நம்பர் 1 பள்ளி அருகாமையில் உள்ள அம்பிகா எலெக்ட்ரிகல்ஸ் (சேட்டு ஹார்ட்வேர்) கடையில் பூட்டை உடைத்து CC TV கேமராவினை உடைத்து சென்றுள்ளனர். அதற்கான படங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டில் எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டது? திருடியது யார்? எத்துனை மணிக்கு திருடினார்கள்? என்பது குறித்து அதிரை போலிஸார் விசாரித்து வருகிறார்கள்.

மர்ம நபர்கள் நமதூரிலும் நடமாடுவதாகவும் வீடுகளுக்கு பொருட்கள் விற்க வருபவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் வருவதாகவும் சிலர் கூறியுள்ளனர். அன்மையில் அதிரையில் ஒரு வீட்டுக்கு புர்கா வந்த ஒரு நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்ப்பட்டு அவரை எச்சரித்து அனுப்பியதாக சில இளைஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் இது போன்று சில பெண்களும் அப்பாவி மக்களிடம் நாடகமாடி கொள்ளை சம்பங்களில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று சந்தேகப்படுமாறு உங்கள் வீடுகளுக்கோ, தெருவிற்கோ மர்ம நபர்கள் வந்தால் சற்று எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும்.

Close