100 கோடி ஐபோன்களை விற்று தீர்த்தது ஆப்பிள்!

உலக அளவில் தொழில்னுட்ப துறையில் ஜாம்பவானாக திகழும் ஆப்பிள் நிறுவனம் ஐ மேக், ஐ பேட், ஐ பாட், ஐ போன் உள்ளிட்ட எலெட்றானிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஏராளமான தொலை தொடர்பு நிறுவனங்களில் போட்டி இருந்தாலும் தங்களது பிரயேகமான இயங்குதளம், வடிவமைப்பு ஆகியவற்றால் விலை அதிகமாக இருந்தாலும் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு நிறுவனமாக உள்ளது.

அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைப்ப்பேசி விற்பனையில் களமிறங்கிய ஆப்பிள் நிறுவனம் கடைசியாக ஐபோன் 6S, ஐபோன் 6 Plus, ஐபோன் SE ஆகிய போன்களை வெளியிட்டிருந்தது. பல நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியிலும் ஆப்பிள் நிறுவனம் நேற்றுடன் நூறு கோடி ஐபோன்களை விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Close